கூறு பட்டியல்கள்

பயனர் டாச்போர்டில் விருப்பங்களாகத் தோன்றும் கூறுகளின் பல பட்டியல்களைக் குறிப்பிடவும், அதில் இருந்து பயனர்கள் தங்கள் இயல்புநிலைக் காட்சியாக ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் அறிய முகப்புப்பெட்டி ஐப் பார்க்கவும்.

Hint

டாச்போர்டில் வழங்கப்பட்ட ஒவ்வொரு கூறு பட்டியலுக்கும் ஒரு நிலை வழங்கப்படும்.

கூறு பட்டியல்களின் பெயர்கள் மற்றும் உள்ளடக்கத்தை நிர்வாக இடைமுகத்தில், கூறு பட்டியல்கள் பிரிவில் குறிப்பிடலாம். ஒவ்வொரு கூறுப் பட்டியலிலும் பயனருக்குக் காட்டப்படும் பெயர் மற்றும் முகவரி இல் அதைக் குறிக்கும் ஒரு ச்லக் இருக்க வேண்டும்.

Hint

நிர்வாகி இடைமுகத்திலிருந்து அநாமதேய பயனர்களுக்கான முகப்பலகை அமைப்புகளை மாற்றவும், அங்கீகரிக்கப்படாத பயனர்களுக்கு முகப்பலகை வழங்கப்படுவதை மாற்றவும்.

தானியங்கி கூறு பட்டியல்கள்

தானியங்கி கூறு பட்டியல் ஒதுக்குதல் விதிகளை உருவாக்குவதன் மூலம் கூறுகளை அவற்றின் ச்லக்கின் அடிப்படையில் தானாகவே பட்டியலில் சேர்க்கவும்.

  • பெரிய நிறுவல்களுக்கான கூறு பட்டியல்களைப் பராமரிக்க பயனுள்ளதாக இருக்கும், அல்லது உங்கள் வலைபெயர்ப்பு நிறுவலில் உள்ள அனைத்து கூறுகளையும் கொண்ட ஒரு கூறு பட்டியலைக் கொண்டிருக்க விரும்பினால்.

Hint

உங்கள் வலைபெயர்ப்பு நிறுவலின் அனைத்து கூறுகளையும் கொண்ட ஒரு கூறு பட்டியலை உருவாக்கவும்.

1. Define Automatic component list assignment with ^.*$ as regular expression in both the project and the component fields, as shown on this image:

மேலே உள்ள உள்ளமைவுடன் வலைபெயர்ப்பு நிர்வாகக் குழுவைக் காட்டும் படம்.